தீண்டாமை, ஜாதி வேற்றுமை, அடிமைப்படுத்துதல், நில அகப்பரிப்பு போன்றவற்றை தொட்டு கதையை அமைத்து நடிகர்களின் சிறந்த நடிப்பாற்றலால் ஓர் அருமையான படைப்பை தந்து இருக்கிறார் 'வெற்றி' மாறன்
தனுஷ் சிவசாமியாகவே வாழ்த்துருக்கிறார். துள்ளுவதோ இளமை 2002 வெளியானது. கடத்த 17 வருடங்களில் அவர் அனுபவம், தொழில் ஆர்வம், உழைப்பு அவரை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றுஇருக்கிறது. சிறந்த நடிகர். மஞ்சு வாரியர், பசுபதி, கென், அம்மு, பிரகாஷ் ராஜ் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறது இயக்குனரின் மற்றும் ஒரு வெற்றி
நிறைய இடங்களில் அவர்கள் மானம், மரியாதை உயிரை விட பெரிதாக மதிக்கின்றது அவர்களின் வாழ்க்கை முறை போல. அப்படிருக்க தன் மகனை கொன்றவன் இவன் தான் என்று தெரியும் போது அவனை கொல்லாமல் நகர்வது சிவசாமியின் வாழ்க்கை அனுபவம்
படம் பார்க்கும் போது அந்த அருவாள் கிடைச்ச நாமே வெட்டுவோம் போல. நியாயத்திற்கு மீறிய செயல்களை காண்பதாலோ என்னவோ. அப்பப்பா எவ்வளோ வெட்டுக்கள்!!
சாப்பிட்டு போ காசு நான் தருகிறேன் என்று சொல்லும் காட்சி எல்லாரிடமும் அந்த மனிதாபிமானம் இருக்கிறது, எதோ சில அற்ப காரணங்களுக்காக நாம் அதிலிருந்து விலகி நிற்கிறோமோ என்று தோன்றவைக்கிறது
எல்லாம் சரி இதுபோன்று இன்னுமா நடக்கிறது, இது இந்த காலகட்டத்திற்கான தகவலை சொல்கிறதா என்றால் கேள்விக்குறியே. இப்படி எல்லாம் நடந்தது முன்பு என்று நடந்ததை சொல்கிறேன் என்றால் சபாஷ்
வெற்றி மாறனின் மற்றும் ஒரு வெற்றி படம்
Nice review
ReplyDelete